வாத்தி கம்மிங்..! திடீரென ரிலீஸ் தேதி அறிவித்து சமூக வலைதளத்தை அலறவிட்ட தனுஷ்..!

தமிழ் சினிமாவில் தற்பொழுது ரசிகர்களின் மனதில் கொடிகட்டி பறந்து வரும் ஒரு நடிகர் என்றால் அது தனுஷ் தான் அந்த வகையில் இவர் சமீபத்தில் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் இந்த மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர் நடித்த வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் பாலிவுட் கோலிவுட் ஹாலிவுட் என அனைத்து வகையான திரைப்படங்களிலும் நடித்து கெத்து காட்டி வருகிறார் அந்த வகையில் முதன்முதலாக அவர் டோலிவூட்டில் அறிமுகமாகும் திரைப்படம் தான் வாத்தி இந்த திரைப்படத்தை வெங்கி அட்லூரி என்பவர்தான் இயக்கியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஒரு வாத்தியாராக நடித்துள்ளார் அதேபோல இந்த திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது தமிழில் இந்த திரைப்படத்திற்கு பெயர் வாத்தி என்றும் தெலுங்கில் இந்த திரைப்படத்தின் பெயர் சார் என்றும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் டைட்டிலில் பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் சரி ரசிகர்கள் இந்த திரைப்படத்தை கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். சமீபத்தில் தான் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரையில் வெளியானது இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று தனுஷின் மார்க்கெட்டை மறுபடியும் கொடுத்துள்ளது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு நல்ல கதை கொண்ட திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார் என்ற காரணத்தினால் இந்த திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகிறார்கள்.

vaththi-2
vaththi-2

மேலும் இந்த திரைப்படத்தினை  சித்ரா என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனமான வம்சி அவர்கள் தயாரித்து உள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திரைப்படத்தில் அதிகாரவபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது அதாவது வார்த்தை திரைப்படம் டிசம்பர் இரண்டாம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகும் என கூறியுள்ளார்கள்.

Leave a Comment