சம்பளமே தராமல் என்னை பல தயாரிப்பாளர்கள் ஏமாற்றினார்கள்.! தனுஷ் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

0
dhanush speach
dhanush speach

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ் இவர் நடிப்பதை தாண்டி நடனம், இசை, இயக்குனர், தயாரிப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர், இவர் வட சென்னையை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் தனுஷ் இரண்டு கெட்டப்புகளில் நடித்துள்ளார், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது இந்த இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் உருக்கமாக பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது இந்த திரைப்படம் எனக்கு சிறந்த திரைப்படமாக அமையும் எனவும் நான் ரசித்து ரசித்து நடித்த திரைப்படம் அசுரன், ஆதனால் இந்த திரைப் படம் எனக்கு திருப்புமுனையாக அமையுமென கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது தயாரிப்பாளர்கள் எனக்கு சம்பளம் தராமலே பல பேர் என்னை ஏமாற்றி உள்ளார்கள், ஆனால் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தாணு படம் தொடங்குவதற்கு முன்பே முழு சம்பளத்தையும் கொடுத்து விட்டார் என உருக்கமாக பேசினார்.