தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கும் தனுஷ் மகன்.. தாத்தா, அப்பா சாயலில் ஹீரோ போல் இருக்கும் யாத்ரா

dhanush
dhanush

சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யா, தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு யாத்திரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தற்போது கருத்து வேறுபாட்டின் காரணமாக தனுஷை பிரிந்திருக்கும் ஐஸ்வர்யா தன் அப்பாவின் வீட்டில் வசித்து வருகிறார்.

அவருடன் யாத்ரா, லிங்கா இருவரும் இருக்கின்றனர். தனுஷ் அப்போது தன் பிள்ளைகளை சந்திப்பதையும், வெளியில் அழைத்துச் செல்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஐஸ்வர்யா வெளியிட்டு இருக்கும் ஒரு போட்டோ பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

அதாவது தன் இரு மகன்களுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா அவர்களின் வளர்ச்சி குறித்து பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார். அதிலும் தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கும் மூத்த மகன் யாத்திராவை ஐஸ்வர்யா நிமிர்ந்து பார்ப்பது போன்று அந்த போட்டோ இருக்கிறது.

அந்த அளவுக்கு கிடு கிடுவென வளர்ந்து நிற்கும் யாத்ரா தன் தாத்தா ரஜினி மற்றும் அப்பா தனுசை மிக்ஸ் செய்தது போன்று இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் வீட்டில் இருந்து அடுத்த ஹீரோ ரெடியாகி விட்டார் என்று கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

yatra
yatra

அதற்கு ஏற்றார் போல் ஹீரோ மெட்டீரியலாக இருக்கும் யாத்ரா விரைவில் சினிமாவில் என்ட்ரி கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தற்போது விஜய் மகன் இயக்குனராக என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில் தனுஷ் மகனின் போட்டோவும் வைரலாகி வருகிறது.

yatra
yatra