சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட தனுஷ்.! சிவகார்த்திகேயனால் வந்த தலைவலி.!

0

நடிகர் தனுஷ் தயாரிப்பில் ஹீரோவாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் சிவகார்த்திகேயன், இவர் முதன்முதலில் சின்னத்திரையில்தான் இருந்தார் அதன் பிறகு தனது விடா முயற்சியால் வெள்ளித்திரையில் அதிவேகமாக முன்னேறி முன்னணி நடிகர்களின் இடத்தை பிடித்து விட்டார்.

இவர் தொடர்ச்சியாக தனுஷ் தயாரிப்பில் தான் நடித்து வந்தார் ஒரு காலகட்டத்தில் தன்னுடைய ரேஞ்ச் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு வேறு தயாரிப்பு நிறுவனங்களிடம் நடிக்க ஆரம்பித்தார். அதனால் தனுஷ் சிவகார்த்திகேயன் இடையே சிறிதாக பிளவு ஏற்பட்டு விட்டதாக மீடியாக்கள் பரப்பினார்கள்.

அதேபோல் அதற்கு தகுந்த மாதிரி இருவரும் மீண்டும் இணையவில்லை, முதலில் நட்பாக இருந்த இருவரும் பிறகு பார்த்துக் கொள்வதே இல்லை. அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் தனுஷ்ஷை மறைமுகமாக தாக்கியது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கிறது, அதனால் இந்த திரைப் படத்தின் புரமோஷன் வேலையை தயாரிப்பு நிறுவனம் அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது. சத்யம் சினிமாவில் பேனர் வைப்பது, ரயில் பெட்டிகளில் விளம்பரம் என சிவகார்த்திகேயனை முன்னணி ஹீரோ ரேஞ்சுக்கு விளம்பரம் செய்து வருகிறார்கள்.

அதேபோல் தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படமும் வெளியாக இருக்கிறது விரைவில், அதற்கான ப்ரோமோஷன் வேலைகளில் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஹீரோ திரைப்படத்தின் வாட்ஸ்அப் ஸ்டிகர் அறிமுகமாகும் என kjr ஸ்டுடியோ அறிவித்துள்ளது.

அதேபோல் சத்யஜோதி நிறுவனம் சமீபத்தில் சில் ப்ரோ பாடலின் ஒரு சிறிய காட்சியை வெளியிட்டு டிக்டாக் செய்து வெளியிடுமாறு அறிவித்திருந்தது. இதை வைத்து பார்க்கையில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் ஏதோ ஒரு மனஸ்தாபம் இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.