வீடியோவை வெளியிட்ட தனுஷின் டாக்டர் சகோதரி.! இவர் தான் அவரின் சகோதரியா என வாய் பிளந்து பார்க்கும் ரசிகர்கள்

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ் ஆவார். இவர் திரையுலகில் தற்பொழுது பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர் உட்பட பன்முகத் திறமைகளை கொண்டுள்ளார். இவர் தமிழ் திரையுலகில் 2002ஆம் ஆண்டில் இவருடைய அப்பா இயக்கத்தில் வெளிவந்த துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதற்கு அடுத்ததாக இவருடைய அண்ணன் இயக்கத்தில் வெளிவந்த  காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் இவருக்கு வெற்றியைத் தந்தது. இதனை தொடர்ந்து திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான், தேவதையை கண்டேன் உட்பட ஏராளமான படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் தற்போது திரையுலகில் சிறந்த நடிகராக கொடிகட்டி பறந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஹாலிவுட்டில் முதன்முறையாக தனுஷ் அவர்கள் பி எக்ஸ்ட்ராடினரி ஜெனி of ஹாஃப்வே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தனுஷின் சகோதரி புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தனுஷின் சகோதரி புகைப்படத்தை பெரும்பாலும் யாரும் பார்த்திருக்க முடியாது. இந்த நிலையில் தனுஷின் சகோதரி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தனுஷிற்கு இவ்வளவு அழகான சகோதரியா என்று வியந்து வருகின்றனர்.

இவர் ஒரு டாக்டர் ஆவார் எனவே கொரோனா பற்றி அவருக்குத் தெரிந்த தகவல்களை வீடியோ மூலம் தனது இன்ஸ்டாகிராமில்  பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.