தனுஷ்,செல்வராகவன் இணையும் புதிய படத்தின் அப்டேட்.!கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

0

தமிழ் சினிமா உலகில் தனது கதை அபூர்வமாக இருக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமான முறையில் கதை இயக்கம் இயக்குனர் தான் செல்வராகவன் இவர் தற்பொழுது சாணி காகிதம் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் செல்வராகவன் இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு தனுஷை வைத்து நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளதாக எப்பொழுதே ஒரு தகவல் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வந்தது.

அதுமட்டுமல்லாமல் அந்த தகவலில் இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு  தயாரிப்பதாகவும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு அறிவிப்பை பதிவு செய்துள்ளார் அதில் இந்த அளவிற்கு நான் எந்த தயாரிப்பிலும் ஈடுபட்டதில்லை ஒருபோதும் பணியாற்றியது இல்லை நானே வருவேன் படத்திற்காக நான் தயாராகிறேன் எனவும் பதிவு செய்துள்ளார்.

மேலும் தனுஷ் தற்போது க்ரே மேன் படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளார் மீண்டும் இந்தியா வந்தவுடன் இந்த திரைப்படம் விறுவிறுப்பாக நடைபெறும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

தற்போது இந்த தகவல் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இவரது ரசிகர்கள் பலரும் மிக ஆவலுடன் கர்ணன் திரைப்படத்தை எதிர்பார்த்து வருகிறார்கள்.