தனுஷுடன் கைகோர்க்கும் செல்வராகவன், புதுப்பேட்டை 2 ஆம் பாகத்தை மேடையிலேயே அறிவித்த இயக்குனர்.! வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன், இவர் தன்னால் முடிந்த அளவுக்கு சிறந்த திரைப்படங்களை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார், இந்த நிலையில் செல்வராகவன் என்ஜிகே படத்திற்கு பிறகு தன்னுடைய அடுத்த திரைப்படத்தின் வேலைகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

செல்வராகவன் அடுத்ததாக ஆயிரத்தில் ஒருவன் 2 அல்லது புதுப்பேட்டை 2 இதில் எந்த திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என கேள்வி எழுப்பி வந்தார்கள், அதற்கு தற்பொழுது ஒரு கல்லூரி விழாவில் இயக்குனர்க செல்வராகவன் புதுப்பேட்டை 2 என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனால் தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற ரசிகர்களும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள், அதுமட்டுமில்லாமல் மேடையில் செல்வராகவன் அறிவித்த வீடியோவும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/sreeram61295/status/1236106132634185729

Leave a Comment