தனுஷ், சிம்பு குறித்து தனது கருத்தை சொன்ன.. நடிகை மீனா.! தீயாய் பரவும் செய்தி.

0

90 காலகட்டங்களில் தென்னிந்திய சினிமாவை கட்டி ஆண்டவர் நடிகை மீனா. ஆரம்பத்தில் ஆள் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் திறமை அதிகமாக வைத்திருந்ததால் பல டாப் நடிகர்களின் படங்களை ஈஸியாக கைப்பற்றினார்.

மேலும் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த தனக்கான இடத்தை எல்லா மொழிகளிலும் பதிவுசெய்தார் இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த மீனா திடீரென படிப்படியாக சினிமா பயணத்தை குறைத்தார் அதன்பிறகு ஆள் அட்ரெஸ் தெரியாத காணாமல் போனார்.

இருப்பினும் இவருக்கான ரசிகர் பட்டாளம் மிகப்பெரிய அளவில் ஓங்கி இருந்தது. நடிகை மீனா பல வருடங்கள் கழித்து மீண்டும் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அண்ணாத்த படத்தில் இவர் இணைந்து உள்ளது கூடுதல் பலமாக பார்க்கபடுகிறது. மேலும் மீனாவை மீண்டும் சினிமா துறையில் பார்க்க திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தற்போது காத்துக் கிடக்கின்றனர்.

அதோடு மட்டுமல்லாமல் தற்போது பாபநாசம் 2 படத்திலும் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை மீனாவிடம் கேட்டனர் அதற்கு பதிலளித்த நடிகை மீனா. இந்த கேள்வியை என்னிடம் கேட்க கூடாது கமலிடம் போய் கேளுங்கள் என தெரிவித்தார். மேலும் ரசிகர்கள் மீனாவிடம் பல கேள்விகளை கேட்டனர்.

அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்ளுகள் என மீனாவிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்த மீனா தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நீங்கள் லேட் என கூறினார்.

மேலும் சினிமா உலகில் சிம்பு-தனுஷ் ஆகிய இரு ஜாம்பவான்கள் சிறந்த நடிகர் யார் என ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு நடிகை மீனா எந்த ஒரு சலனமும் இல்லாமல் இருவருமே திரை உலகில் மிகத் திறமையானவர்கள் என கூறி அந்த கேள்விக்கு முட்டுக்கட்டை போட்டார்.