கர்ணன் திரைப்படத்தின் மிரட்டலான அடுத்த போஸ்டரை வெளியிட்டு மாஸ் காட்டிய தனுஷ்.! ரசிகர்கள் கொண்டாட்டம்.!

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை நடிகர்கள் திரைப்படங்களில் போட்டி போட்டு நடித்து வருவதுதான் வழக்கம் அந்த வகையில் பிரபல நடிகர்களுக்கு இணையாக நிறைய திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் தான் தனுஷ்.

இவர் தற்பொழுது அந்தராங்கி ரே,கர்ணன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துவருகிறார் அதிலும் குறிப்பாக கர்ணன் திரைப்படம் வருகின்ற 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது மேலும் கர்ணன் திரைப்படத்தின் டீஸர் பாடல்கள் எல்லாம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது கண்ணன் திரைப்படத்தை பார்ப்பதற்கு தனுஷ் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

தனுஷ் நடித்த ஆரம்பகால கட்டத்தில் பட வாய்ப்புகள் எதுவும் சரியாக கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையை காட்டி ரசிகர்களை கவர்ந்து விட்டார் அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் தேசிய விருது பெற்றது மட்டுமல்லாமல் இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது என்று தான் கூற வேண்டும்.

மேலும் கர்ணன் திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து கலைப்புலி தாணு இப்படத்தை தயாரிக்கிறார் அதிலும் குறிப்பாக தனுஷுக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் ரஜிஷா விஜயன் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டரை பகிர்ந்துள்ளார் ஆம் இந்த போஸ்டரில் தனுஷ் ஒரு முகமூடி போட்ட நபரை கட்டியணைத்து உள்ளார்.

இந்த போஸ்டரை பார்த்த தனுஷ் ரசிகர்கள் பலரும் படம் வேற லெவலில் தான் இருக்கும் என்று கூறி வருவது மட்டுமல்லாமல் இந்த போஸ்டரை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment