தனுஷ் கூப்பிட்டும் வர மறுக்கும் வெற்றிமாறன்.? வளர்த்த கேடா நெஞ்சில் குத்திய கதை போல் மாறிடேச்சே..

dhanush and vetrimaran
dhanush and vetrimaran

தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரையிலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது கதாபாத்திரத்தில் கடினமாக நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருபவர் நடிகர் தனுஷ். அதற்கு ஏற்றவாறு இவரது திரைப்படங்களும் அதிரிபுதிரி ஹிட் அடிக்கின்றனர்.

அண்மையில் கூட இவர் நடிப்பில் வெளியான கர்ணன், ஜகமே தந்திரம் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தான் ஒரு சிறந்த இயக்குனருடன் இணையும் பொழுது அந்தப் படம் மிகப் பிரம்மாண்ட படமாக மாறுகிறது அந்த வகையில் நடிகர் தனுஷ் வெற்றிமாறன் உடன் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக இதுவரை இருந்து வந்துள்ளன.

அப்படித்தான் தற்போதும் தனுஷ் வெற்றிமாறன் இணைய ஆசைப்பட்டு உள்ளார். ஏனென்றால் இவரது நடிப்பில் அண்மையில் வெளியான கல்யாண கலாட்டா, மாறன் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் அடுத்ததாக ஒரு ஹிட் படத்தை கொடுத்து தனது திறமையை காட்ட உடனடியாக வெற்றிமாறன் என்னை அழைத்துள்ளார்.

ஆனால் வெற்றிமாறனும் தற்போது தனுஷுக்கு ஓகே சொல்லாமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்செய்தியை தற்போது தனுஷ் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. வெற்றி மாறனுக்கு அதிக பட வாய்ப்புகளைக் கொடுத்து அசத்தியவர் தனுஷ். தற்போது இவருக்கு வெற்றிமாறன்  பட வாய்ப்பு கொடுக்காமல் இருக்கிறார் ரசிகர்கள் ஒரு பக்கம் புலம்பினாலும் மறுபக்கம் உண்மையான காரணம் நடிகர் வெற்றிமாறன் விஜய் சேதுபதி சூரியை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார்.

இந்த படம் மிக விரைவிலேயே திரையரங்கில் வெளிவர இருக்கிறது அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவுடன் கை கோர்க்க வாடிவாசல் படத்திற்கான பணிகளும் போய்க் கொண்டிருப்பதால் இப்பொழுது தனுஷ் உடன் இணைய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.