இளம் வயதிலேயே சினிமாவுலகில் நடிக்கத் தொடங்கியவர் நடிகர் தனுஷ் அவரது அண்ணன் இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் நடித்து தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார். அதன்பின் இவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் அனைத்தும் சிறப்பாக இருந்த காரணத்தினால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இவரது பெயர் நிலைத்து நின்றது.
மேலும் தன்னை தக்க வைத்துக் கொள்ள அதற்கேற்றார்போல காதல், ஆக்ஷன் போன்ற படங்களை இந்த நிலையில் பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஓடி கொண்டிருந்த இவர் தற்போது முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்ற பிறகு தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அண்மையில் வெளியான கர்ணன், ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இவரது கையில் ஐந்தாறு படங்கள் இருக்கின்றன. மாறன், திருச்சிற்றம்பலம், வாத்தி, D43, நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் என அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி உள்ளதால் தனுஷின் சினிமா பயணம் நீண்டுகொண்டே செல்கிறது.
தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் தற்போது வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன அதோடு மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் தனது நடிப்பு திறமையை காட்டி உள்ளார். இப்படி சினிமாவுலகில் ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென நேற்று காலை தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்த இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இச்செய்தி ரசிகர்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதன்படி பார்க்கையில் தனுஷின் சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 150 கோடி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.