கையில் ஆயுதத்துடன் தனது புதிய படத்தின் தலைப்பை அறிவித்த தனுஷ்.! வைரலாகும் போஸ்டர்.!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். தனுஷுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த நிலையில் தனுஷ் ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தமிழ் மொழி மட்டுமல்லாமல் இந்தி ஆங்கிலம் என ஒரு ரவுண்ட் கலக்கி வருகிறார்.

அதேபோல் ரசிகர்களிடம் தனுஷின் திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது அதனால் தனுஷை சுற்றி பல முன்னணி தயாரிப்பாளர்கள் தொடர்ந்து படத்தை தயாரிக்க முன்னுக்கு வருகிறார்கள். சமீபத்தில் தனுஷின் அசுரன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

உடனே இயக்குனர் மாரி செல்வராஜ் மீண்டும் தனுஷை வைத்து மற்றொரு படம் தயாரிக்கப் போவதாக உடனடியாக அறிவிப்பை வெளியிட்டார் இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரை சுற்றியுள்ள வட்டாரங்களில் நடைபெற்று வருகிறது. படத்தின் டைட்டிலை தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

இதற்கு முன் படத்தின் டைட்டில் என பல டைட்டில் சுற்றி வந்த நிலையில் படத்திற்கு கர்ணன் என படக்குழு தலைப்பை வைத்துள்ளது. மாரி செல்வராஜ் தனுஷ் வைத்து இயக்கும் புதிய திரைப்படத்திற்கு கர்ணன் என டைட்டில் வைத்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ட்விட்டரில் படபிடிப்பு  புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார் தனுஷ்  இதனை தனுஷ் ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version