புதுப்பேட்டை 2-ஆ.? அசுரன் 2-ஆ? அதிரடியாக அறிவித்த தனுஷ் ரசிகர்கள் உச்சகட்ட கொண்டாட்டத்தில்.!

நடிகர் தனுஷ் சமீபகாலமாக ஹிட் திரை படங்களை கொடுத்து வருகிறார். தனுஷிற்கு சமீபத்தில் வெளியாகிய அசுரன் மற்றும் பட்டாசு திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சுருளி படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது, மேலும் தனுஷ் பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தனுஷ் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ராச்சன் பட இயக்குனருடன் ஒரு படம் என பல திரைப்படங்கள் இவருக்காக வரிசை கட்டி நிற்கிறது.

அசுரன் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் என பல விருதுகளை அள்ளி வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் கூட விருது விழாவில் கலந்து கொண்டு விருது வாங்கிய தனுஷ்ஷிடம் அடுத்ததாக அசுரன் 2 வருமா எனக் கேட்டதற்கு முதலில் புதுப்பேட்டை 2 விற்கு ஒரு வழி பண்ணுவோம் அதன்பிறகு அசுரன் 2 ரெடி பண்ணுவோம் என தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

இந்தநிலையில் தனுஷ் கூறியதிலிருந்து தெரிகிறது அடுத்ததாக உருவாக்குவது புதுப்பேட்டை இரண்டு தான் என்பது, இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வரும் என தெரிகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment