ஆக்ஷன் த்ரில்லர் இயக்குனருடன் கைக்கோர்த்த தனுஷ்.! இந்தமுறை வேற லெவல்.. இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவருக்கு சமீபத்தில் பட்டாஸ் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அதுமட்டுமல்லாமல் அந்த திரைப்படத்தில் ஜில் ப்ரோ பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

அடுத்ததாக தனுஷ் பரியேறும்பெருமாள் திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தனுஷ் மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது இந்த நிலையில் இயக்குனர் யார் என்ற அறிவிப்பை தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

துருவங்கள் பதினாறு திரைப்படத்தை இயக்கிய இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் தான் தனுஷின் அடுத்த திரைப்படத்தை இயக்கயிருக்கிறார், இந்த திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார் இதனை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் தனுஷ். அதற்கு கார்த்திக் நரேன் ரிப்ளே செய்துள்ளார்.

Karthick_Naren
Karthick_Naren

Leave a Comment