என்னால் தனுஷுடன் நடிக்க முடியாது ஓட்டம் பிடித்த 26 வயது நடிகை.! அந்தப் படத்துல அப்படி தடவினா எப்படி ஓகே சொல்வாங்க.!

0

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வரும் நிலையில் இதற்கு முன்பு தனுஷுடன் இணைந்து நடித்து இருந்த 26 வயது நடிகை ஒருவர் மீண்டும் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க முடியாது என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

தனுஷ் முன்பெல்லாம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் பெரிதாக வசூல் ரீதியாக எந்த திரைப்படமும் வெற்றியை பெற்றது இல்லை அதோடு தனுஷ் குறைந்த அளவு தான் சம்பளம் பெற்றுவந்தார். இப்படிப்பட்ட நிலையில் இவர் நடிப்பில் வெளிவந்த அசுரன், கர்ணன் இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இத்திரைப்படம் தான் தனுஷுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது ஏனென்றால் இதுவரையிலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறாத திரைப்படங்களில் நடித்து இவருக்கு இந்த திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. இத்திரைப்படத்திற்கு பிறகு இந்தியாவில் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார்.

அதோடு தொடர்ந்து பாலிவுட், ஹோலிவுட்டு என ஏராளமான மொழி திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. இவ்வாறு இவர் புகழின் உச்சத்தில் இருந்து வருவதால் தற்போது உள்ள இளம் நடிகைகள் முதல் நடிகர்கள் வரை அனைவரும் இவரின் திரைப்படத்தில் நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அதோடு முக்கியமாக இளம் நடிகைகள் தான் இவரின் திரைப்படத்தில் ஒன்றில் நடித்தால் கூட சினிமாவில் முன்னணி நடிகைகளாக மாறி விடலாம் என்ற எண்ணத்தில் தானாக வந்து வாய்ப்புகளை கேட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் 26 வயது முன்னணி நடிகை ஒருவர் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

ஆம், அது வேறு யாருமில்லை ரசிகர்களின் கனவுக் கன்னியான நஸ்ரியா தான். நஸ்ரியா மற்றும் தனுஷ் இருரின் கூட்டணியில் முதன்முறையாக நய்யாண்டி திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இவ்வாறு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த இத்திரைப்படத்தில் ஒரு ரொமான்ஸ் பாடல் காட்சி இடம்பெற்றிருக்கும் அதில் நஸ்ரியாவின் இடுப்பை தனுஷ் தடவுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது.ஆனால், உண்மையில் அது நஸ்ரியா இல்லை. எனவே இயக்குனர் நஸ்ரியாவிடம் கூறாமல் வேறு ஒரு டூப் பெண்ணை வைத்து இதுபோன்ற காட்சியை பிடித்திருந்தார்கள்.

naiyanti
naiyanti

அந்தவகையில் திரைப்படம் வெளியான பின்னர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது எனவே நஸ்ரியா மாற்றம் படக்குழுவினர்களுக்கு இடையே பெரும் சண்டை நிலவிய நிலையில் தான் இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் தனுஷ் இதிலிருந்து விலகி விட்டாராம். எனவே இதிலிருந்து நஸ்ரியா தனுஷின் மீது கோபமாக இருந்து வருவதால் இதற்கு மேல் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று கறாராக கூறியுள்ளாராம்.