சிம்புவின் காதலிகளை தன் வசப்படுத்தி கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ள தனுஷ்.. அடுத்தது இவங்களா.. என்ன கொடுமடா இது..

0

சினிமாவில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்தவர்கள் ஏராளமானோர் உள்ளார்கள் அந்த வகையில் தனது சிறந்த நடிப்பினால் சினிமாவிலும் ரசிகர்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி.

இவர் விஜய்,சூர்யா, தனுஷ் என ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்தார். அதோடு இவர் பப்ளிமாஸ் போன்ற உடலமைப்பு ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து தெலுங்கு, தமிழ் இரண்டு திரைவுலகிலும் முன்னணி நடிகையாக கலக்கி வரும் இவர் கிட்டத்தட்ட 50 திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். அந்தவகையில் 50வது திரைப்படமாக தமிழில் மஹா திரைப்படத்தில் நடித்துள்ளார் இத்திரைப்படத்தில் நடிகர் சிம்பு கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் வாலு திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்து இருந்தார்கள் அவ்வப்போது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு சிறிது காலம் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள் இப்படிப்பட்ட நிலையில் இருவரும் என்ன காரணம் என்று சரியாக தெரியவில்லை பிரிந்து விட்டார்கள்.

எனவே நீண்ட வருடங்களுக்கு பிறகு சிம்பு மற்றும் ஹன்சிகா நடிப்பில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தினை தொடர்ந்து ஹன்சிகா நடிகர் தனுஷுக்கு ஜோடியாக பத்து வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க உள்ளார்.

hansika
hansika

இவர்கள் இணைந்து நடிக்கவுள்ள இத்திரைப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளாராம் தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ள இத்திரைப்படத்தில் மூன்று ஹீரோயின்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த மூன்று ஹீரோயின்களில் ஒருவராக ஹன்சிகா மோத்வானி நடிக்க உள்ளார் என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இதற்கு முன்பு தனுஷ் மற்றும் ஹன்சிகா இருவரும் இணைந்து மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.