பிரம்மாண்ட படத்துடன் மோதும் தனுஷ் – பாதாள குழின்னு தெரிஞ்சே கால விடுறாரு.. புலம்பி தீர்க்கும் ரசிகர்கள்.!

naanae-varuven-

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வரும் தனுஷ் அண்மைக்காலமாக இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் சொல்லிக் கொள்ளும்படி வெற்றியை பெறவில்லை இருப்பினும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

அந்த வகையில் மாறன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நானே வருவேன், வாத்தி, திருச்சிற்றம்பலம் மற்றும் பெயரிடப்படாத ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷின் நானே வருவேன்  திரைப்படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஏனென்றால் தனுஷ் நடிப்பில் செல்வராகவன்  இயக்கத்தில் இந்த படம் உருவாகி உள்ளது அதே சமயம் தனுஷும் அவரது அண்ணனும் இதுவரை இணைந்துள்ள படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான் அந்த வகையில் நானே வருவேன் திரைப்படம் மிகப்பெரிய ஒரு வெற்றி திரைப்படமாக இருக்கும் என தெரிய வருகிறது.

நானே வருவேன் திரைப்படத்தில் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் கூடுதல் தகவல். இந்த நிலையில் தனுஷின் நானே வருவேன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதியில் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதே நாளில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகமும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ponniyin-selvan
ponniyin-selvan

இந்த படம் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது இந்த படத்துடன் தனுஷின் நானே வருவேன் படம் மோதுவதால் ரசிகர்கள் சற்று வருத்தத்துடன் இருக்கின்றனர். ஒரு பக்கம் ரசிகர்கள் 500 கோடி பட்ஜட் படத்துடன் தனுஷ் மோதுவதற்கு ஒரு தில்லு வேண்டும் என கூறி கமெண்ட் அடித்தும் வருகின்றனர் பொறுத்திருந்து பார்ப்போம் எந்த படம் வெற்றியை ருசிக்க போவது என்று..