தயாரிப்பாளர்களை அதல பாதாளத்திற்கு தள்ளக்கூடாது என தனுஷ் எடுத்த அதிரடி முடிவு.? ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த தகவல்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் இவரது நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தற்போது ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் உருவாக்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் தனுஷ் சமீபகாலமாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இவர் கடைசியாக ‘அசுரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று பல விருதுகளை வாங்கியது.

இந்த நிலையில் ஜகமே தந்திரம் திரைப்படம் திரைக்கு வர வேண்டியது ஆனால் ஊரடங்கு உத்தரவால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே போகிறது, திரையரங்கம் திறப்பதற்கு இன்னும் நாள் ஆகும் என்பதால் திரைப்படத்தை OTT இணையதளத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளர்கள் எந்த வகையிலும் நஷ்டம் அடையக் கூடாது என்பதற்காக இந்த முடிவிற்கு தனுஷ் சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது, ஆனால் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை தற்போது படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

படக்குழு கூறியதாவது ஜகமே தந்திரம் திரைப்படம் OTT வெளியாக இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என கூறியுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் திரையரங்கு திறக்கப்பட்டதும் இந்த திரைப்படம் திரையில்தான் வெளியிடப்படும் எனவும் அதிகாரபூர்வமாக கூறியுள்ளார்கள்.

Leave a Comment