தனுஷ் படமா.. அந்த வாய்ப்பே வேண்டாம் தெறித்து ஓடும் இளம் நடிகை.!

தமிழ் சினிமா உலகில் சத்தமே இல்லாமல் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் இதுவரையில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, கர்ணன், அசுரன் போன்ற படங்கள் இவருக்கு பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது அதில் ஒரு சில முக்கிய படங்கள் இவருக்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாறன் திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படி பெரிய வெற்றியை ருசிக்காமல் போனது. சினிமா உலகில் வெற்றி தோல்வி எல்லாம் சகஜம் என்பது போல தனுஷ் அடுத்த படத்தை வெற்றிப்படமாக கொடுக்க “வாத்தி” என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

அதைத் தொடர்ந்து அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் இது இப்படி இருக்க நடிகர் தனுஷ் இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளார் இவர் இதற்கு முன்பாக பவர் பாண்டி என்னும் படத்தை இயக்கினார் அதனை தொடர்ந்து இப்போது ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார்.

அந்த படத்தில் இவர் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறாராம் மிக பிரமாண்ட பொருட்செலவில் அன்புச்செழியன் இந்த படத்தை தயாரிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷுக்கு ஜோடியாக இந்த படத்தில் ஸ்ரீதேவி மகள் பாலிவுட் இளம் நடிகை ஜான்வி கபூர் நடிக்க வைக்க படக்குழுவினர் அதிகம் ஆர்வம் காட்டியது.

jhanvi kapoor
jhanvi kapoor

ஆனால் ஜான்வி கபூர் தனுஷ் படமா வேண்டவே வேண்டாம் என கூறி மறுத்துள்ளார். நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவையும் தாண்டி ஹாலிவுட், பாலிவுட் போன்ற மொழிகளில் நடித்து வரும் நிலையில் தற்போது நடிகர் தனுஷ் படத்தையே ஜான்வி கபூர் மறுத்துள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

Leave a Comment