அசுரன் தமிழ் நாட்டில் வெறித்தனமான வசூல்.! இதோ வசூலின் முழு விவரங்கள்

0
asuran
asuran

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி என்றாலே அதற்க்கு ரசிகர்களிடம்  மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் ஏனென்றால் இவர்கள் கூட்டணியில் இதற்கு முன் வெளியாகிய பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி திரைப்படங்களே.

அந்த வகையில் தற்பொழுது மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் நான்காவது முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் அசுரன், இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு பெற்று வருகிறது, படத்தில் தனுஷின் நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

இந்த நிலையில் அசுரன் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை சுமார் 28 கோடி வரை வசூல் செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன, அது மட்டுமில்லாமல் இன்னும் பல திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக தான் ஓடிக்கொண்டு இருக்கின்றது.

அப்படி இருக்க இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 50 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது அப்படி 50 கோடி வசூல் செய்தால் தனுஷ் திரைப்பயணத்தில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இந்த திரைப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.