சிம்புவுடன் சேர்ந்து பாடும் வாய்ப்பை தவற விட்ட தனுஷ்.! எந்த படத்தின் பாடல் தெரியுமா..

0

திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் பலரும் ஹீரோ என்ற அந்தஸ்தை தாண்டி தன்னை சினிமாவில் மற்ற சம்பந்தப்பட்ட தொழில்களில் அதிகம் ஆர்வம் காட்டி விடுகின்றனர்அதனால் சினிமா தன்னை விட்டு விடாது என்பது அவர்களின் கருத்து.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல்வேறு பிரபலங்கள் பன்முகத் தன்மை கொண்டவராக விளங்குகின்றனர் அந்த வகையில் சிம்பு-தனுஷ் ஆகியோர்கள் நடிகர் என்ற அந்தஸ்தையும் தாண்டி படங்களை தயாரிப்பது, இயக்குவது, இசை அமைப்பது, பாடுவது என பலவற்றில் அத்கம் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இப்படி இருந்தாலும் இருவரும் இதுவரை சேர்ந்து படங்களில் பாடியது இல்லை ஆனால் அந்த வாய்ப்பு ஒருதடவை மட்டுமே கிடைத்தது. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் உருவான “கேடி பில்லா கில்லாடி ரங்கா” படத்தில் இன்றோ பாடல்லான ஒரு பொறம்போக்கு என்று தொடங்கும் பாடலை சிம்பு மற்றும் யுவன்சங்கர்ராஜா பாடி இருப்பார்கள்.

ஆனால் முதலில் பாட இருந்தது என்னமோ சிம்பு மற்றும் தனுஷ்தான். அப்பொழுது நடிகர் தனுஷ் மரியான் திரைப்படத்திற்காக வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய சூழல் இருந்ததால் அவருக்கு பதிலாக இந்த படத்தில் இணைந்து சிம்புவுடன் யுவன் பாடினார்.

அதன்பிறகு தனுஷும்,சிம்புவும் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரும் காலத்திலாவது இவர்கள்இவரும் இணைந்து பாடுவார்களா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.