தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட தனுஷ்.! அதுக்குன்னு ஒரு வண்டி மண்ணையா போட்டுகிறது

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் மாறன். இந்த திரைப்படம் திரையரங்கில் ஒளிபரப்ப படாமல் நேரடியாக OTT இணையதளத்தில் வெளியானது. படத்தைப் பார்த்த பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் கார்த்திக் நரேன் அவர்களை மோசமாக விளாசி வருகிறார்கள்.

மாறன் படத்தை நீங்கள் தான் இயக்கிணீர்களா என்று நம்பவே முடியவில்லை என்ன படம் எடுத்தீர்கள்  இந்த அம்மா சென்டிமென்ட் தங்கச்சி சென்டிமென்ட் இதெல்லாம் வேண்டாம் ஹாலிவுட் சினிமாவிற்கு ஒரு வித்தியாசமான இயக்குனர் கிடைத்துவிட்டார் என நினைத்துக் கொண்டிருந்தோம் அது எல்லாம் இப்பொழுது வீணாகிவிட்டது.

இது உங்களுடைய படம் போலவே இல்லையே இதற்கு தான் இன்ஜினியரிங் படிப்பை விட்டுவிட்டு வந்தீர்களா. சரி விடுங்க இனி அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம் அடுத்த படத்தில் இதுபோல் ஹாலிவுட் மசாலா படங்களை எடுக்க வேண்டாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மாறன் திரைப்படத்தின் கதையில் தனுஷ் தலையிட்டதால்.

மாறன் திரைப்படம் கார்த்திக் நரேன் ஸ்டைலின் இல்லை என கூறப்படுகிறது மேலும் கார்த்திக் நரேன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியில் உண்மையை அப்புறம் சொல்கிறேன் என தெரிவித்துள்ளார். அதைப் பார்த்த உடனே பலரும் தனுஷ் தலையீடு பற்றி தானே சொல்ல போகிறீர்கள் என்றார்கள்.

அதுமட்டுமில்லாமல் தனுஷ் ரசிகர்கள் கார்த்திக் நரேன் மோசமாக விமர்சித்து வருகிறார்கள். இதையெல்லாம் பார்த்த கார்த்திக் நரேன் உடனே அந்த ஸ்டோரியை நீக்கிவிட்டார்.தனுஷ் மாறன் படத்தின் கதையிலும் இயக்கத்திலும் தலையிட்டதால் தான் கார்த்திக் நரேன் படம் போல் இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment