தனுஷின் கர்ணன் திரைப்படத்தின் கதை இதுதான்.! இயக்குனர் மாரி செல்வராஜ் ஓபன் டாக்.

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் கடைசியாக நடித்த அசுரன் மற்றும் பட்டா திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் முதன்முறையாக தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு கர்ணன் எனப் பெயர் வைத்துள்ளார்கள்.

கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை 90% முடிவடைந்து உள்ளதாக தகவல் வெளியாகின, இந்த திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஜீஷா விஜயன், லால், யோகி பாபு, கௌரி கிஷன், ஆகியோர்கள் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படம் குறித்து அமைப்பு ஒன்று காவல்துறையிடம் புகார் செய்துள்ளது அதில் இந்த திரைப்படம் குறிப்பிட்ட சாதியை தாக்கும் விதத்தில் படமாக்கப்படுகிறது இந்த படத்தின் மீதும் இயக்குனர் மாரிசெல்வராஜ் மீதும் புகார் அளிக்கப்பட்டது. இதைப்பற்றி கேட்கையில் இதுவரை இயக்குனர் மாரிசெல்வராஜ் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஆனால் தற்பொழுது மாரி செல்வராஜ் இது குறித்து பேசியுள்ளார் அவர் கூறியதாவது, “யாருடைய குரலுக்கு உடனடியாக பதில் கிடைக்கிறது அதனை யார் கேட்டால் சீக்கிரம் கிடைக்கிறது, யாருடைய குரல் கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது, அப்படி கண்டுகொள்ளாமல் விடப்படும் அதற்கு காரணம் என்ன இதெல்லாம் சேர்ந்ததுதான் ‘கர்ணன்’” என இயக்குனர் மாரிசெல்வராஜ் கூறியுள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

Leave a Comment