பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள தனுஷ் அவர்கள் தற்போது கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை எஸ் தாணு அவர்கள் தயாரிக்க உள்ளார்.தனுஷ் அவர்கள் முதல்முறையாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இந்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் எடுக்க பட்டு வருகிறது. இப்படத்தில் தனுஷ் அவர்கள் மக்களோடு மக்களாக இருந்து நடித்து வருகிறார். இந்த படத்தில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் அவர்கள் இசையமைத்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் யோகி பாபு, ராஜிஷா விஜயன் மற்றும் பல பிரபலங்கள் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில் சந்தோஷ் நாராயணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் இது தனுஷின் கர்ணன் படத்தில் இப்பாட்டு உள்ளதா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
???? pic.twitter.com/h0z2ZUeCam
— Santhosh Narayanan (@Music_Santhosh) February 18, 2020