தனுஷ் டீ-ஷர்ட்டில் தளபதி.! கர்ணன் படப்பிடிப்பிலிருந்து தனுஷ் வெளியிட்ட புகைப்படம்.!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் சமீபகாலமாக பல திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தனுஷ் கடைசியாக நடித்த அசுரன் மற்றும் பட்டாசு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது இந்த நிலையில் அடுத்ததாக தனுஷ் கர்ணன் திரைப்படத்தில் நடித்துவருகிறார் இந்தத் திரைப்படத்தையும் கிட்டத்தட்ட நடித்து முடித்துவிட்டார் தனுஷ். இந்த திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் இந்த திரைப் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு புதிய புகைப்படத்தை தனுஷ் பகிர்ந்துள்ளார் அந்த புகைப்படத்தில் தனது குதிரையுடன் இருக்கிறார் மேலும் அவரது டீ ஷர்ட்டில்  தளபதி ரஜினியின் புகைப்படம் இருக்கிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த உடன் தனுஷ அடுத்ததாக இந்தி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment