தனுஷின் கர்ணன் திரைப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு என்ன தெரியுமா.?

இரண்டாவது திரைப்படத்திலேயே பல கோடி ரசிகர்களை தன் பக்கம் இழுத்து போட்டவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 9ம் தேதி வெளியான திரைப்படம் கர்ணன். படம் வெளிவந்த  முதல் நாளில் இருந்து இன்று வரையிலும் வசூல் அள்ளி வருகிறது.

இந்த நிலையில் படத்தை பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதாவது கர்ணன் படத்தின் தலைப்பு முதன்முதலில் வைக்கப்பட்டது வேறு ஒன்று தானாம் அதன் பிறகுதான் கர்ணன் என்ற பெயரை மாற்றி உள்ளது படக்குழு.

சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தின் கலை இயக்குனர் கூறியது கர்ணன் தலைப்பிற்கு முன்பாக இந்த படத்திற்கு பாண்டிய ராஜாகள் என பெயர் வைக்கப்பட்டது.

அது பிடிக்காததால் கர்ணன் என தலைப்பு வைக்கப்பட்டது கர்ணன் தலைப்பே பல பிரச்சனைகள் தாண்டி  வந்தது ஆனால் பாண்டியராஜாகள் என்று பெயர்  வைத்திருந்தால் அதை விட அதிக பிரச்சனைகள் வந்து சேர்ந்து இருக்கும் என திரையுலக வட்டாரங்கள் தற்போது கூறுகின்றனர்

Leave a Comment

Exit mobile version