கர்ணன் படத்தை பிரமாண்டமாக கைப்பற்றிய OTT நிறுவனம்.! அப்போ புது ரெக்கார்ட் தான்

தனுஷ் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கர்ணன் இந்த திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் கர்ணன் திரைப்படத்தில் இருந்து தற்போது வரை 3 பாடல்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது அதிலும் குறிப்பாக கண்டா வரச்சொல்லுங்கள் என்ற பாடல் ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 7.01 மணிக்கு வெளியாக உள்ளது ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தை பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் ஓட்டிட்டு தளத்திற்காக ரைட்ஸை கைப்பற்றியுள்ளதாம்.

படம் வெளியாகி 30 நாட்கள் கழித்து அமேசான் பிரைம் தனது OTT தளத்தில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக இந்த தகவல் வைரலாகி வருகிறது.

Leave a Comment