தனுஷ் நடித்த ‘காதல் கொண்டேன்’ திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தான்.!

0
kadhal konden
kadhal konden

2003 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கே விமலா கீதா தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் காதல் கொண்டேன், இந்த திரைப்படத்தின் கதையை செல்வராகவன் தான் எழுதி இயக்கியிருந்தார், படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

தனுஷுடன் இணைந்து சோனியாஅகர்வால், நாகேஷ், சுதீப், தானியேல், பாலாஜி. ஆகியோர்கள் நடித்திருந்தார்கள், இந்தநிலையில் செல்வராகவன் முதன்முதலில் எழுதிய கதையாம் ஆனால் ஒரு சில காரணங்களால் துள்ளுவதோ இளமை முதல் திரைப்படமாக அமைந்தது.

இந்த நிலையில் இந்த  திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஜவகர் ஒரு பேட்டியில் காதல் கொண்டேன் திரைப்படத்தின் கதை எழுதும் பொழுது தனுஷுக்காக எழுதவில்லை, இந்த திரைப்படத்தின் கதை முதன் முதலில் கதாநாயகனாக முரளியை வைத்து தான் எழுதினாராம் அவரை தான் நடிக்க வைக்கலாம் என்று முயற்சி செய்தார்களாம்.

பிறகு தான் தனுஷ் அந்த திரைப்படத்தில் நடித்தார் என கூறினார் ஜவஹர்.