தீபாவளிக்கு வெடிக்கும் பட்டாசு போல் ரசிகர்களுக்கு தனுஷ் கொடுக்கும் தீபாவளி விருந்து.! தலைவன் வேற லெவல் என கூறும் ரசிகர்கள்

0

dhanush jagamey thanthiram movie video song update: நடிகர் தனுஷ் கடைசியாக அசுரன் மற்றும் பட்டாசு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்டது.

திரையரங்கு திறந்தவுடன் இந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் நாளை முதல் திறக்கயிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து ஜகமே தந்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சற்றுமுன் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷ் சமூகவலைதளத்தில் ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெற்றுள்ள புஜ்ஜி என்ற வீடியோ பாடல் வருகின்ற 13ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.

நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாடயிருக்கும் நேரத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக இந்த பாடலை வெளியிடுகிறார்கள் என கருதப்படுகிறது.

ஜகமே தந்திரம் திரைப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா, லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், சௌந்தராஜா, வடிவுகரசி என பலரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். மேலும் இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.