புதுப்பேட்டை சாயலில் கேங்ஸ்டராக மிரட்டும் தனுஷ்.! அடேங்கப்பா இயக்குனர் இவரா அப்ப சொல்லவே வேண்டாம்.! ஆட்டத்தில நம்ம தலைவரும் இருக்கிறாரா

0
dhanush d50
dhanush d50

தமிழ் சினிமாவில் நடிப்பதை தாண்டி படத்தை தயாரிப்பதும்  பாடுவதும்  என பல திறமைகளை வெளிக்காட்டி வருபவர் நடிகர் தனுஸ் ஆவார் தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட் ஹாலிவுட் என சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார். இவருக்கு சினிமா வாழ்க்கை சிறப்பாக இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் கொஞ்சம் சருக்களை சந்தித்து விட்டார் ஏனென்றால் இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களை திருமணம் செய்து கொண்டு பல வருடம் ஒன்றாக வாழ்ந்து விட்டு தற்போது இருவரும் பிரிந்து சென்று விட்டார்கள்.

இந்த நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஆனாலும் இருவரும் தனித்தனியாக தங்களுடைய வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் படத்தை இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அவர் தற்பொழுது லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்தது.

அதேபோல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. தன்னுடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு நான் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில்  புதிய திரைப்படத்தை இயக்க இருக்கிறார் தனுஷ். இந்த திரைப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் தானே நடிக்கவும் செய்ய இருக்கிறார். இவர் இயக்கும் திரைப்படம் தன்னுடைய ஐம்பதாவது திரைப்படம் என்பதால் அதிக கவனம் செலுத்த இருக்கிறார்.

மேலும் தனுஷ் இயக்கும் இந்த புதிய திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் அப்டேட் அடிக்கடி சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைக்கிறது. ஏற்கனவே தனுஷ் பா பாண்டி என்ற திரைப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் அந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல இயக்குனர் என்ற பெயரை பெற்று விட்டார்.

அப்படி இருக்கும் நிலையில் தான் இயக்கும் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷாலை நடிக்க வைக்க இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் துஷாரா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் என்றால் இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார்.

ஏற்கனவே தனுஷ் அனிருத் இருவரும் இணைந்தாலே அந்த திரைப்படம் மாபெரும் ஹிட் அடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அப்படி இருக்கும் வகையில் தனுஷ் அனிருத் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணை இருப்பதால் ரசிகர்களுக்கு இரண்டு மடங்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது. சமீபத்தில் D 50 போட்டோ சூட் சமீபத்தில் நடைபெற்றுள்ளது அதில் தனுஷ் அனிருத் ஆகியோர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அதனால் அனிருத் கண்டிப்பாக இந்த திரைப்படத்தில் இணை இருப்பது தெரியவந்துள்ளது.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தனுஷ் இயக்கும் இந்த புதிய திரைப்படம் முழுக்க முழுக்க கேங்க்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது ஏனென்றால் தன்னுடைய ஐம்பதாவது திரைப்படம் மாஸாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் தனுஷ். கிட்டத்தட்ட இந்த திரைப்படம் புதுப்பேட்டை சாயலில்  இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

மற்ற நடிகர்கள் நடிகைகள் தேர்ந்தெடுக்கும் பணிகளில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளார் தனுஷ் விரைவில் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு அனைத்தும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.