தனுஷ் தான் நம்பர் 1.! வெளியான ஒரு நாளில் சாதனை படைக்கும் வாத்தி ட்ரைலர்…

நடிகர் தனுஷ் அவர்கள் நடிப்பில் உருவாக்கி உள்ள வாத்தி திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அந்த வகையில் வாத்தி படத்தின் டிரைலர் வெளியாகி பல மில்லியன்கள் பார்வையாளர்கள் கடந்த youtube இல் முதல் இடத்தை பிடித்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் ரசிகர்கள் வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் நாளுக்காக மிக தீவிரமாக காத்திருக்கிறார்கள் என்ரே சொல்லலாம்.

துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது பல திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் ஆடுகளம் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து தமிழில் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் நடித்து தற்போது புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து தற்போது வாத்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக இருப்பதாக பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

ஏற்கனவே இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாக இருந்த நிலையில் ஒரு சில பிரச்சனையின் காரணமாக இந்த படத்தில் ரிலீஸ் தேதி தள்ளி போனது. இதனை தொடர்ந்து தற்போது பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள வாத்தி திரைபடத்திர்க்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் அவர்கள் அடுத்ததாக கேப்டன் மிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படமும் இந்த ஆண்டு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியிருக்கிறது இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் வெளியான ஒரு நாட்களில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் தற்போது முதல் இடத்தைப் பிடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Comment