அடுத்த படத்தில் சோழ மன்னனாக நடிக்க போகும் தனுஷ்.. பொன்னியின் செல்வன் பட நடிகர் கொடுத்த சர்ப்ரைஸ்…

0
aayirathil-oruvan
aayirathil-oruvan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக திகழ்பவர் நடிகர் தனுஷ் இவர் தற்போது திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் நானே வருவேன் படங்கள் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது அதனை தொடர்ந்து வாத்தி திரைப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்கள் அடுத்ததாக கேப்டன் மிலர் என்ற திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான தனுஷின் நானே வருவேன் திரைப்படம் கலைவையான விமர்சனத்தை பெற்றது முதல் நாள் மட்டுமே ஏழு கோடி வரை வசூல் செய்துள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தை தனுஷின் அண்ணனான  செல்வராகவன் அவர்கள் இயக்கி உள்ளார்.

மேலும் செல்வராகவன் இயக்கத்தில் இன்னொரு படத்தில் கமிட்டாகியுள்ளார் தனுஷ் இந்த படத்தை தயாரிப்பாளர் தானு தயாரிக்க உள்ளார்.  இதனை அடுத்து மறுபடியும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் அவர்கள் நடிக்க உள்ளாராம். அதில் சோழர் நாட்டு இளவரசராக தனுஷ் அவர்கள் நடிக்க உள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த பார்த்திபன் அவர்கள் செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி கலமையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் தற்போது அதை ஆரவாரத்துடன் தூக்கி கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியாகும் என பார்த்திபன் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தில் சோழ இளவரசனாக தனுஷ் அவர்கள் தான் முதலில் நடிக்க இருந்ததாகவும் அதற்கு பதிலாக தான் பார்த்திபன் அவர்கள் நடித்ததாகவும் கூறியுள்ளார். இரண்டாம் பாகத்தில் சோழ இளவரசனாக தனுஷ் அவர்கள் தான் நடிப்பார் என்று கூறியுள்ளாராம் பார்த்திபன். எப்போது வரும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.