தமிழ் திரையுலகில் முதன் முதலாக தளபதியுடன் கைகோர்க்கும் தனுஷ் எகிறும் எதிர்பார்ப்பு.!

இளைய தளபதி விஜய் தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்க தயாராகி விட்டார் தனது 65 திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் உடன் கைகோர்த்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெட்டேக் நடிக்க உள்ளார் இந்த திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

இந்த படத்தின் பூஜை சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்தது இந்த பூஜையில் விஜய் மாஸ்டர் படத்தில் எப்படி இருந்தாரோ அப்படியே வந்தார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் கூட சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி  வந்ததை நாம் பார்த்திருப்போம்.

இந்நிலையில் இந்த திரைப்படம் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது இதனையடுத்து இந்த திரைப்படத்தில் ஒரு பிரபலம் நடிக்க உள்ளதாக தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆம் அந்த பிரபலம் யார் என்று கேட்டால் தனுஷ்தான் தனுஷ் ஏற்கனவே பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் இந்நிலையில் தளபதி 65 திரைப்படத்தில் தனுஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வைரலாகி வருகிறது.

dhanush
dhanush

ஆனால் இதைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment