வளர்த்துவிட்ட குருவை ஒரு கை பார்க்க துடிக்கும் தனுஷ்.! இதெல்லாம் எங்க போய் முடியுமோ..

0
dhanush
dhanush

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக இருப்பவர் நடிகர் தனுஷ் இவர் விரல்விட்டு என்னும் இயக்குனர்களுடன் அதிக படம் பண்ணி இருக்கிறார். அந்த வகையில் தனது அண்ணன் இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன எனத் தொடர்ந்து இயக்குனர் செல்வராகவனுடன் படம் பண்ணி இருக்கிறார்.

கடைசியாக கூட நானே வருவேன் படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது.  இதேபோல இயக்குனர் வெற்றிமாறனுடனும் நடிகர் தனுஷ் அதிக படங்கள் பண்ணியிருக்கிறார் இப்படி இருந்தாலும் தற்பொழுது தன்னை வளர்த்து விட்ட இயக்குனருடனே நேருக்கு நேராக தனுஷ் மோதுவது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

இயக்குனராக பிரபலமடைந்த செல்வராகவன் சமீபகாலமாக நடிப்பில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் பீஸ்ட், சாணி காயிதம் போன்ற படங்களில் நடித்த இவர் மோகன்ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள பாகசூரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தை எதிர்தே தனுஷ் மோதி இருக்கிறார்.

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான வாத்தி திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி கோலாகலமாக ரிலீஸ் ஆக உள்ளது அதே தேதியில் தான் அவரது அண்ணனும், இயக்குனருமான செல்வராகவன் நடித்த பாகசூரன் திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

இதில் யார் கை ஓங்கினாலும் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை தான் கொடுக்கும் பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன வேண்டுமானாலும் நடக்கும்..