என் குடும்பம் இன்னைக்கு நிம்மதியா சோறு தண்ணி குடிக்க தனுஷ் தான் காரணம்..! பிரபல காமெடி நடிகரின் உறக்கமான பேச்சு..!

0

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிக்கும் நடிகர் என்றால்  நடிகர் தனுஷும் ஒருவர் இவர் ஆரம்பத்தில் ரசிகர்களும் இயக்குனர்களும் திரை உலக பிரபலங்களும் இவரை வெறுத்தாலும் அதைப்பற்றி கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் தன்னுடைய உச்சத்தை தொட்டார்.

இந்நிலையில் தற்போது தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்துடன் வலம் வரும் நடிகர் தனுஷ் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் புது புது அறிமுக நடிகர்களை அறிமுகப்படுத்திக் தான் வருகிறார்.

இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முதலாக நடிகர் தனுஷ்தான் திரையுலகில் அறிமுகப்படுத்தினார். இவ்வாறு தனுஷ் மூலம் திரையுலகில் நுழைந்தார் அதன் காரணமாகத்தான் அவர் ஒரு நல்ல நிலைமையில் இருக்க முடிந்தது.

ஆனால் இப்படி ஒரு சந்தர்ப்பம் அவருக்கு வேறு ஒருவரிடம் கிடைக்குமா என்றால் அது சந்தேகம்தான். அதேபோலதான் நடிகர் ரோபோ சங்கரையும் மாரி திரைப்படத்தின் மூலமாக மிக பிரபலமாக ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தினார்.

இவ்வாறுதான் அந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அதன்பிறகு அவருக்கு படவாய்ப்புகளும் வழிவழியாக கிடைக்க ஆரம்பித்துவிட்டது.  தற்போது தமிழ் சினிமாவில் ரோபோ சங்கர் இல்லாத திரைப்படமே கிடையாது என்ற அளவிற்கு மிகவும் வளர்ந்து விட்டார்.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த போது அவருக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளாராம் ஆனால் வெளியில் சொல்லாமல் அவற்றை பர்சனல் ஹெல்ப் என  வாயடைத்து விட்டாராம்.  இதேபோலதான் விஜய் டிவி பிரபலமாக இருந்த சீனாவிற்கும் பவர் பாண்டி திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்து அவரையும் உயர்த்தி விட்டார்.