ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்த தனுஷ்.? திரைப்படங்களை இயக்குவது பற்றி சொன்ன தகவல்.

வசூல் மன்னனாக தமிழ் திரையுலகில் வலம் வருபவர் தான் தனுஷ் இவரது நடிப்பில் தற்போது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருவது மட்டுமல்லாமல் இவருக்கு கடந்த சில வருடங்களாகவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது என்று தான் கூறவேண்டும் அந்த அளவிற்கு இவரது திரைப்படங்கள் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது முதலில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான கர்ணன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று நல்ல விமர்சனத்தையும் பெற்றிருந்தது.

தனுஷ் நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப்படங்களும் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து வருகிறது அதற்கு முக்கிய காரணம் இவர் திரைப்படங்களில் நடிக்கும் இயக்குனர்களை பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ள திரைப்படம் தான் ஜகமே தந்திரம்.

இந்த திரைப்படத்தில் தனுஷின் நடிப்பு மிகவும் நன்றாக இருப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் பாடல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்து வருகிறது.

சமீபத்தில் ஜகமே தந்திரம் திரைப்படத்தை பற்றி தனுஷ் படக்குழுவினரிடம் கலந்துரையாடிய போது அவர் ஒரு தகவலை ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார் என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் ஜகமே தந்திரம் திரைப்படத்தை பற்றி படக்குழுவினரிடம் தனுஷ் கலந்துரையாடிய போது தற்பொழுது நான் நிறைய இயக்குனர்களிடம் பணியாற்றி வருகிறேன்.

dhanush8
dhanush8

அதனால் நான் திரைப்படங்களை இயக்க கொஞ்சம் நாள் ஆர்வம் காட்டாமல் இருக்க போகிறேன் என கூறியுள்ளாராம்.அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் தனுஷ் நடிக்கும் இன்னும் நிறைய திரைப்படங்களை பற்றிய புதிய அப்டேட் கொடுங்கள் என சமூக வலைதளப் பக்கங்களில் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment