இயக்குனராக தனுஷின் அப்பா இயக்கிய 6 மெகா ஹிட் திரைப்படங்கள். மனுஷன் எப்படி எடுத்திருக்கிறார் பார்த்தீர்களா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ், இவரின் அப்பா கஸ்தூரி ராஜா சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேல் இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர், இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இசையமைப்பாளராகவும் தனது பணியை செய்துவருகிறார்.

இந்தநிலையில் கஸ்தூரிராஜா தன்னுடைய இரண்டு மகன்களை சினிமாவுக்காக அர்ப்பணித்துள்ளார், தனுஷ் மற்றும் செல்வராகவன் தமிழ் சினிமாவில் பணியாற்றி வருகிறார்கள், தனுஷ் நடிகராகவும் செல்வராகவன் இயக்குனராகவும் வலம் வருகிறார்கள். இயக்குனர் கஸ்தூரிராஜா 2006லிருந்து 2018 வரை சினிமாவை விட்டு விலகி இருந்துள்ளார்.

மேலும் இவர் விசுவின் அசிஸ்டன்ட் இயக்குனராக கிட்டதட்ட 16 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார் அந்தவகையில் கஸ்தூரி ராஜா இயக்கிய திரைப்படங்களில் வெற்றிகண்ட திரைப்படங்களை தற்போது பார்க்கலாம்.

என் ராசாவின் மனசிலே: கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் என் ராசாவின் மனசிலே, இந்த திரைப்படத்தில் ராஜ்கிரன் மீனா, வடிவேலு, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். படத்தில் வடிவேலு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.

முழு படத்தையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும் : YouTube

ஆத்தா உன் கோயிலிலே: 1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் செல்வா மற்றும் கஸ்தூரி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ஆத்தா உன் கோயிலிலே, இந்த திரைப்படத்தில் ரவி ராகவினோதினி, ஜனகராஜ், விஷ்ணு சக்கரவர்த்தி, பிரபாகரன் செந்தில், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று ஹிட்டடித்தது.

முழு படத்தையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும் : YouTube

சோலையம்மா: 1992ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம்தான் சோலையம்மா இந்த திரைப்படத்தை எழுதி இயக்கியவர் கஸ்தூரிராஜா, படத்தில் ராகுல், சுகன்யா கரிகாலன், ஜனகராஜ், செந்தில், வினுசக்கரவர்த்தி ஜெய்கணேஷ் காந்திமதி ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படமும் கஸ்தூரி ராஜாவுக்கு ஹிட்டடித்தது.

முழு படத்தையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும் : YouTube

நாட்டுப்புறப்பாட்டு: 1996 ஆம் ஆண்டு சிவகுமார் குஷ்பூ மனோரமா செந்தில் கவுண்டமணி ஆகியோர்கள் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் நாட்டுப் புறப்பாட்டு இந்த திரைப்படத்தை கஸ்தூரி ராஜாதான் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் அப்போது உள்ள காலகட்டத்தில் மிகப்பெரிய ஹிட்டடித்தது.

முழு படத்தையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும் : YouTube

எட்டுப்பட்டி ராசா: கஸ்தூரிராஜா இயக்கத்தில் நெப்போலியன், குஷ்பு, ஊர்வசி பொன்வண்ணன், மணிவண்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி திரைப்படம் எட்டுப்பட்டி ராசா, இந்த திரைப்பட ஆயிரத்து 1997 வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று கிராமத்து மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற திரைப்படம்.

முழு படத்தையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும் : YouTube

துள்ளுவதோ இளமை: கஸ்தூரிராஜாவின் மகன் தனுஷ் முதன்முதலில் அறிமுகமான திரைப்படம் தான் துள்ளுவதோ இளமை இந்த திரைப்படத்தில் சேரன், ரமேஷ்கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். 2002 ஆம் ஆண்டு வெளியாகி இளசுகள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

முழு படத்தையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும் : YouTube

Leave a Comment