அஜித் விஜய் ரசிகர்களையே தூக்கிசாப்பிட்ட தனுஷ் ரசிகர்கள்.! இது வேற லெவலா இருக்கே.!

0

வெள்ளித்திரையில் தனது நடிப்பு திறமையை ரசிகர்களுக்கு அபூர்வமாக காட்ட வேண்டும் என்பதற்காக வித்தியாசமான கதைகளம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் என்றால் அது தனுஷை தான் கூற வேண்டும்.

இவர் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் தேசிய அளவில் விருது பெற்றது  அது அவருக்கு மிகவும் பெருமையாக தான் இருக்கும்.

மேலும் தனுஷ் நடிப்பில் தற்போது கர்ணன் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது கர்ணன் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது படம் நாளைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதால் தமிழக அரசு ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் திரையரங்குகளை 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவித்ததால் கர்ணன் திரைப்படம் வெளியாகுமா என ரசிகர்களிடையே மிகவும் குழப்பம் ஏற்பட்டிருந்தது.

இதற்கிடையில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளைக்கு திரைக்கு வரும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் புதுச்சேரியில் நடிகர் தனுஷ் ரசிகர்கள் நடுக்கடலில் அவருக்கு பேனர் வைத்துள்ளனர் அப்போது எடுத்த வீடியோ காணொளி தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோ காணொளியை பார்த்த ரசிகர்கள் பலரும் தனுஷ் ரசிகர்கள் வேற லெவல் என்றுதான் கூறுகிறார்கள்.