தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்திற்கு மீண்டும் விழுந்து பெரும் அடி.! இனி அவ்ளோதானா.? விளக்கம் கொடுத்த படக்குழு

0
enai noki payum thotta
enai noki payum thotta

இன்று வெளியாக இருந்த தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் நீதிமன்ற உத்தரவு காரணமாக திரையிடுவது தள்ளி வைக்கப்படுள்ளது. இந்நிலையில் இது குறித்து படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “செப்டம்பர் 6 அன்று வெளியாக இருந்த என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தை எங்களால் வெளியிட முடியவில்லை.

பெரு முயற்சிகள் பல செய்து இந்த படத்தை வெளியிட முடியும் என்று உறுதியோடு பணிபுரிந்து எங்களுக்கு இது பெரிய ஏமாற்றமாக உணர்ந்து வருகிறோம், மிக விரைவில் அடுத்த சில தினங்களில் வெளியிட மேலும் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

இது நீண்ட பெரும் பயணம் நாங்கள் அறிவோம் மறக்கவில்லை, இதில் ஏற்படும் தாமதத்தால் உங்களுக்கு ஏற்படும் ஏமாற்றமும் விரக்தியும் அதன் காரணமாகவே நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் நாங்கள் அறிவோம் உங்கள் கருத்துக்களையும் கணக்கில் கொண்ட எங்களது பயணமும் அமைந்துள்ளது என்பதையும் தெரிந்து கொள்கிறோம் ஆனால் இலக்கை எட்டும் நிலையில் நாங்கள் வேண்டுவது உங்க அன்பு ஆதரவு மட்டுமே.

இந்த நிலையில் நீங்கள் பொறுமையுடன் எங்களையும் இந்த திரைப்படத்தை ஆதரிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இந்த திரைப்படத்தை திரையரங்கில் நீங்கள் பார்க்கும் பொழுது உங்கள் இத்தனை காத்திருப்பு இப்படைப்பு நியாயம் செய்யும் என உளமாற நம்புகிறோம்.” என தெரிவித்துள்ளனர்.