திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மூலம் தனுஷ் தோத்தாரா? ஜெயிச்சாரா.? முழு விவரம் இதோ.!

0
dhanush 1
dhanush 1

தென்னிந்த சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது மேலும் இந்த திரைப்படத்தினை இயக்குனர் மித்ரன் R. ஜகவர் அவர்கள் இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர்,நித்தியா மேனன், ராசி கண்ணா ஆகியவர்கள் நடித்துள்ளார்கள்.

இவர்களை தொடர்ந்து பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, முனீஸ் காந்த் உள்ளிட்டவர் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் அனிருத் இசையமைத்திருந்தார் இப்படத்தினை சன் ப்ரூக்சஸ் நிறுவனம் தயாரித்திருந்தது மேலும் இன்று வெளியான இந்த திரைப்படம் எப்படிப்பட்ட விமர்சனங்களை சந்தித்துள்ளது என்பதை பார்க்கலாம்.

அதாவது படித்து முடித்துவிட்டு வேலை தேடும் ஒரு இளைஞனுக்கு சரியான வேலை கிடைக்காத காரணத்தினால் டெலிவரி வேலை பார்க்கும் பணியை தொடங்குகிறார். பிறகு இந்த நேரத்தில் தனுசுக்கு நித்யா மேனன் தோழியாகவும், தாத்தாவாக பாரதிராஜா ஆகியோர்கள் உடனிருந்து இவர்களுடைய கெமிஸ்ட்ரி மிகவும் அருமையாக ரசிக்கும்படி இருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் முடிந்த பிறகும் தனுஷ் மற்றும் நித்தியா மேனன் இவர்களின் கேரக்டர் மனதில் நிற்கிறது.

இவ்வாறு தோழியான நித்யா மேனன் தனுஷின் தந்தையாக பிரகாஷ்ராஜ் மேலும் தனுஷுக்கு இரண்டு காதலிகளுக்கும் இடையான காட்சிகள் இந்த படத்தின் கதைகளாக அமைந்துள்ளது இதுதான் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் கதை.தற்பொழுது இதனைப் பற்றிய ரசிகர்களிடம் கேட்கும்பொழுது முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாக தனுஷ் நித்யா மேனன், ராசி கண்ணா இவர்களுடைய காட்சிகள் மிகவும் அருமையாக இருக்கிறது.

இரண்டாம் பாகம் பாதியில் முதல் பாதியை ஒப்பிட்டால் சற்று போராக  இருப்பதாகவும் முதல் பாதை அளவிற்கு இல்லை எனவும் கூறி வருகிறார்கள். மேலும் இவர்களைத் தொடர்ந்து நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பதாக கூறியுள்ளார்கள். இவ்வாறு இவர்களுடைய அனைத்து நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்துவதற்கு முக்கிய காரணம் தனுசாக இருக்கிறார்.

அந்த வகையில் நித்யா மேனன், ராசி கண்ணா, பிரகாஷ் ராஜ்,ப்ரியா பவானி சங்கர் ஆகியோர்களின் நடிப்பு திறமை மிகவும் அருமையாக உள்ளது. அனிருத் பாடல்கள் அனைத்துமே ஹிட்டாகி விட்டது இவ்வாறு தனுஷ் இந்த திரைப்படத்தில் புகுந்து விளையாடுகிறார் இவருக்கு மிகப்பெரிய கம்பேம் திரைப்படமாக இது அமைந்துள்ளது. மொத்தத்தில் படம், பாடல் என அனைத்தும் சூப்பர் என கூறியுள்ளார்கள்.