நயன்தாராவையும் விட்டு வைக்காத தனுஷ்! என்னா, குமாரு இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே.

0

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குனர் என்று பல வித்தைகளை கொண்டுள்ளார் நடிகர் தனுஷ்.

இவர் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான் உட்பட இன்னும் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தற்பொழுது  நயன்தாரா மற்றும் தனுஷ் பற்றிய சில விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதாவது நயன்தாரா சரத்குமாருடன் இணைந்து ஐயா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இதற்கு முன்பு ரானா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த சுள்ளான் திரைப்படத்தில் முதலில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடிக்க இருந்தார். ஆனால் தனுஷ், நயன்தாரா எனக்கு ஏத்த ஜோடி அல்ல என்று கூறி நயன்தாராவை வேண்டாம் என்று கூறிவிட்டாராம். அதன் பிறகு தான் நடிகை சிந்து துலானி நடித்துள்ளார்.

இந்த நிலையில் அதன் பிறகு 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த யாரடி நீ மோகினி என்ற திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து தனுஷ் நடித்துள்ளார்.வேண்டாம் என்று சொல்லி விட்டு பிறகு தானே போய்கேட்டுள்ளார் நேரம் காலம் தான் எல்லாத்துக்கும் காரணம்.