சம்பள விஷயத்தில் இந்த துக்கடா பையனை கூட முந்த முடியாமல் தவிக்கும் தனுஷ்.! ஹாலிவுட், இந்தி பக்கம் போயும் சம்பளம் ஏரலையே..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த தனுஷ் சமீபகாலமாக வித்தியாசமான படங்களையும், அதே சமயம் தனது திறமைக்கு ஏற்ற மாதிரியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு வருகிறார் இதன் விளைவாகவே அவர் தமிழையும் தாண்டி இந்தி, ஹாலிவுட் என பறக்கிறார்.

தமிழில் அசுரன் படத்தை தொடர்ந்து இவரது “கர்ணன்” திரைப்படம் நல்ல வசூலையும், வரவேற்பையும் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இந்த திரைப்படம் நிச்சயம் மிகப்பெரிய ஒரு லாபத்தை ஈட்டும் என கூறப்படுகிறது அதற்கு காரணம் இன்று வரையிலும் மக்கள் கூட்டம் இந்த திரைப்படத்திற்கு மோதுகின்றனர்.

இது ஒருபக்கம் இருக்க தற்போது ஹிந்தி, ஹாலிவுட் பக்கம் அடுத்தடுத்த திரைப்படங்களில் பட வாய்ப்பு தற்போது இவருக்கு வந்த வண்ணமிருக்கின்றன அந்த வாய்ப்பை விடக்கூடாது என்பதற்காக அதிலும் கால் தடம் பதித்து தற்போது வெற்றி காண ஆயத்தமாய் இருக்கிறார்.

சினிமாவில் எது எப்படியோ எல்லா இடத்திலும் நல்ல பெயரை பெற்று வருகிறார் ஆனால் சினிமாவில் சம்பள விஷயத்தில் மட்டும் இன்னும் தனுஷ் அதலபாதாளத்தில் கிடக்கிறார். இவருக்கு பின்னாடி வந்த சிவகார்த்திகேயன் இவரைவிட குறைந்தது 4,5  கோடிகள் அதிகமாக சம்பளம் வாங்குகிறார். தமிழ் சினிமாவில் தற்போது அதிக அளவு மார்க்கெட்டை கைப்பற்றி உள்ளவர் தனுஷ்.  இவரது அளவிற்கே சிவகார்த்திகேயன் வைத்துள்ளாராம் என்றால் அது கேள்விக்குறிதான்.

இப்படி இருக்க தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் மட்டும் ஏன் இவ்வளவு சம்பளம் என்று எல்லோருக்கும் ஒரு கேள்வி எழும்கிறது ஆனால் உண்மையில் அவர் திரைப்படம் ஒவ்வொன்றும் தனுஷ் படத்தை விட அதிக வசூலை ஈட்டுகிறது. அதனால் அவரது சம்பளம் தற்போது அதிகரித்துள்ளது.

சிவகார்த்திகேயன் ஒரு படத்திற்கு தற்போது 22 கோடி சம்பளம் வாங்குகிறார். நடிகர்  தனுஷ் வெறும் 18 கோடி தான் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment