தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் செல்வராகவன், இவர் தனுஷை சினிமாவில் உயர்த்திவிட்டவர்களில் இவரும் ஒருவர் முதன்முதலில் செல்வராகவன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தான் தனுஷ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார் இந்த நிலையில் தற்போது செல்வராகவன் மற்றும் தனுஷ் இருவரும் நீண்ட வருடங்களுக்கு பிறகு புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள்.
அதனால் தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் தனுஷ் ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள் அதன் பிறகு சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள் இந்த நிலையில் திடீரென ஐஸ்வர்யாவை விட்டு விலகுவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டார் தனுஷ் இந்த தகவல் சினிமா உலகத்தை ஆட்டி வைத்தது.
இந்த அறிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்தாலும் ஒரு சிலர் அவர் அவர்கள் முடிவை அவர்கள் எடுக்க உரிமை உண்டு என கூறினார்கள் இந்தநிலையில் தனுஷ் தற்பொழுது படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருக்கிறார் அதேபோல் ஐஸ்வர்யாவும் தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் ஐஸ்வர்யா முஸாஃபிர் என்ற பாடலை இயற்றி வந்தார்.
அதேபோல்தான் தனுஷும் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தனுஷின் அண்ணன் செல்வராகவன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்வராகவனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து என்குரு, நண்பர், தந்தை போல் இருப்பவர் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு தனுஷ் குடும்பத்தை மட்டும் அல்லாமல் ரசிகர்களையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
