முதல் நாள் வசூல் கருத்துக்கணிப்பில் அஜித், விஜய்யை ஓட விட்ட தனுஷ்.! எத்தனை கோடி தெரியுமா.?

தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் இன்று திரையில் வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வரும் வாத்தி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் கருத்துகணிப்பு குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் அவர்கள் தற்போது வாத்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று திரையில் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருந்தது.

அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என்று ரசிகர்கள் விமர்சனம் கொடுத்து வருகிறார்கள் இதனை தொடர்ந்து தற்போது வாத்தி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் கருத்துக்கணிப்பு தகவல் ஒன்று வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அதாவது வாத்தி திரைப்படம் வியாழன் கிழமை இரவு 10 மணி வரை அட்வான்ஸ் புக்கிங் மட்டும் 1.5 கோடி வரை டிக்கெட் புக் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது அது மட்டும் இல்லாமல். வெளியான முதல் நாளில் மட்டும் 20 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக விஜய், அஜித் திரைப்படங்கள் தற்போது 28 முதல் 30 கோடி வரை வசூல் குவிக்கும் நிலையில் தனுஷின் வாத்தி திரைப்படம் 20 கோடி வசூலித்தால் பெரிய வெற்றி தான் என்று கூறி வருகிறார்கள்.

வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்கள் அடுத்ததாக கேப்டன் மிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் அப்டேட்டுகளும் அவ்வபோது வந்து கொண்டே இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படம் வெளியான இன்று தனுஷின் அண்ணனான செல்வராகவன் திரைப்படம் பாகாசுரன் திரைப்படமும் இன்று வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் முதன் முறையாக அண்ணனும், தம்பியும் நேரடியாக திரையில் மோதி இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த இரண்டு படத்தில் எந்த படம் ஜெயிக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Comment