அசுரன் திரைவிமர்சனம்.!

0
asuran-review
asuran-review

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் ஆடுகளம் பொல்லாதவன் வடசென்னை படத்தை தொடர்ந்து தற்போது அசுரன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வெற்றி பெற்றதா என்பதை பார்க்கலாம்.

படத்தின் கதை

தனுஷ் தனது இளைய மகன் சிதம்பரத்துடன் காட்டிற்குள் பதுங்கிப் பதுங்கி செல்லும் காட்சிகளில் இருந்து படம் தொடங்குகிறது, இவர்கள் ஏன் காட்டிற்குள் பதுங்கிப் பதுங்கி வாழ்கிறார்கள் என்பதை ஒரு சிறிய பிளாஷ்பேக் மூலம் விரிவாக காட்டுகிறார்கள், தனுஷிற்கு அழகான மனைவி மஞ்சு வாரியர், இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோருடன் சந்தோஷமாக வாழ்கிறார், இவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பவர் மஞ்சுவாரியர் அண்ணன் பசுபதி தான்.

இவர்கள் வாழும் ஊர் வடக்கூர், தெற்கூர் என இரண்டாகப் பிரிகிறது, ஆனால் தெற்கூர்ரில் அனைத்து விவசாய நிலங்களையும் மிரட்டி மிரட்டி வாங்கி வருகிறார் வில்லன், ஆனால் தனுஷ் நிலத்தை மிரட்டி அவர்களால் வாங்க முடியவில்லை தனுஷிற்கு 3 ஏக்கர் நிலம் இருக்கிறது, அனைத்து நிலங்களையும் வாங்கி அங்கு ஒரு சிமெண்ட் பேக்டரி காட்டவும் வில்லன்கள் திட்டம் தீட்டுகிறார்கள், ஆனால் தனுஷோ தன்னிடம் இருக்கும் மூணு ஏக்கர் நிலத்தை மட்டும் கொடுக்க மறுக்கிறார்.

அதனால் தனுஷை வில்லன்கள் அடிக்கடி தொந்தரவு செய்து வருகிறார்கள், தனுஷின் மூத்த மகன் அதை தைரியமாக தட்டிக் கேட்கிறார், அதனால் அவரை போலீஸ் கைது செய்கிறது, அதனால் தனுஷ் ஊர் பொதுமக்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார், என்னதான் மன்னிப்பு கேட்டாலும் வில்லன்கள் கொடூரமாக கொலை செய்து விடுகிறார்கள், இதற்குப் பழி தீர்க்க முடியாமல் மனதிற்குள்ளே புழங்கிக் கொண்டு வாழ்கிறார் தனுஷ் , தனது அப்பா கோழையாக இருப்பதை கண்டு தனுஷின் இளைய மகன் கோபப்படுகிறார்.

தனுஷ் இளைய மகன் கோவப்பட்டு செய்யும் சில காரியங்கள் தான் தனுஷூம் அவரது குடும்பமும் தலைமறைவாக வாழ்வதற்கு காரணம். தனுஷ் ஏன் இப்படி இருக்கிறார் இளம் வயதில் எப்படி இருந்தார் என்பது ஒரு பிளாஷ்பேக் வருகிறது. இத்தனை பிரச்சனைகளையும் தாண்டி வில்லன்களை எப்படி ஜெயித்தார் என்பதுதான் மீதிக்கதை.

தனுஷ் தனக்கான கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் வயதான தனுஷ் ஆக தத்ரூபமாக நடித்துள்ளார், எப்பொழுதும் தனுசு தனக்கான கதாபாத்திரத்தை மிகவும் அற்புதமாக நடிப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான் இந்த திரைப் படத்திலும் அப்படித்தான்.

வெற்றிமாறன் திரைப்படம் என்றாலே அனைத்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருக்கும் அதேபோல் இந்த முறையும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டார், வெட்க்கை என்ற நாவலை படமாக்கி இருந்தாலும் எந்த இடத்திலும் சலிப்புத் தட்டாமல் மிகவும் அற்புதமாக இயக்கியுள்ளார்.

அதேபோல் ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும் ராமரின் எடிட்டிங் படம் பார்ப்பவர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு வருகிறது, மஞ்சு வாரியர் கென் கருணாஸ், டிஜே, அம்மு அபிராமி, பசுபதி, பிரகாஷ்ராஜ் என படத்தில் அனைவரும் தனது கதாபாத்திரத்தை அற்புதமாக நடித்துள்ளார்கள், அதே போல் கிளைமாக்ஸ் காட்சிகளில் தனுஷ் சொல்லும் கருத்து க்ளாப்ஸ் அள்ளுகிறது.

“நம்மிடம் பொருள் இருந்தால் புடிங்கி கொள்வார்கள். ஆனால் படிப்பு இருந்தால்..” என மகனுக்கு அவர் செய்யும் அட்வைஸ் தற்போதைய இளைய சமுதாயத்திற்கு நிச்சயம் சொல்லப்படவேண்டிய ஒன்று. மொத்தத்தில் அசுரன் ஒரு வார்த்தையில் சொன்னால் ‘வெறித்தனம்’.

அசுரன் = 3.5 / 5