தனுஷின் அசுரன் அசுரத்தனமான வசூல் வேட்டை.! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி தகவல்

0

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி என்றாலே ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு இருக்கும் ஏனென்றால் இதற்கு முன் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய திரைப்படங்கள் அனைத்தும் ஹிட்டடித்தது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இதனை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் உள்பட பலர் நடிப்பில் கடந்த 4ம் தேதி வெளியான படம் ‘அசுரன்’. இந்தப் படம் 10 நாட்களில் மொத்த வசூலில் ரூ.50 கோடியைக் கடந்துள்ளது.

மேலும், திரையரங்க வியாபாரம், இசை உரிமை, தொலைக்காட்சி உரிமம், டிஜிட்டல் உரிமம், வெளிநாட்டு உரிமம் என ஒட்டுமொத்தமாக ரூ.100 கோடியைக் கடந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து தயாரிப்பாளர் தாணு கூறுகையில், ‘கபாலி’, ‘துப்பாக்கி’, ‘தெறி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து என் தயாரிப்பில் 4-வதாக ரூ.100 கோடியைக் கடந்துள்ள படம் ‘அசுரன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.