மாமனாருக்கு பிறகு மருமகனுக்கு கிடைத்த அங்கீகாரம்.! இது வேற லெவல் உலகளவில் செம்ம மாஸ்..

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய அசுரன் திரைப்படம் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன.

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி என்றாலே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது ஏனென்றால் இவர்கள் கூட்டணியில் வெளிவந்த ஆடுகளம் ,பொல்லாதவன், வடசென்னை, அசுரன் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் அசுரன் திரைப்படத்தில் மஞ்சுவரியர், கென் கருணாஸ், பாலாஜி சக்திவேல், ஆகியோர்களும முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படத்தில் தனுஷ் ஏற்று நடித்த சிவசாமி கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வட்டது அது மட்டுமில்லாமல் திரையுலகிலும் தனுசுக்கு பெரிய பாராட்டு கிடைத்தது.

ஜிவி பிரகாஷ் இசையில், தாணு தயாரிப்பில் வெளியாகிய இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது அதேபோல் தமிழில் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் ஆனது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை தெலுங்கில் நரப்பா என்ற டைட்டிலில் ரீமேக் ஆகிறது இதில தனுஷ் நடித்த சிவசாமி கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார்  மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் ப்ரியாமணியும் நடிக்க இருக்கிறார், இந்தநிலையில் இந்த திரைப்படம் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதற்கு முன் சீன மொழியில் பாகுபலி, எந்திரன் 2.0 ஆகிய திரைப்படங்கள் சீன மொழியில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது அந்த வகையில் தற்போது அசுரன் திரைப்படம் முதன்முதலாக சீன மொழியில் ரீமேக் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா லாக் டவுன் முடிந்தவுடன் இயல்புநிலை திரும்பியவுடன் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment