சன் பிக்சர் தனுஷை வைத்து தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கொழுகொழு நடிகை.!

தனுஷ் தற்பொழுது தொடர்ந்து சில வெற்றி படங்களை கொடுத்து வருகிறார், சமீபத்தில் வெளியாகிய அசுரன் மற்றும் பட்டாசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டியது, இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சுருளி’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் தனுஷ் அடுத்ததாக பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் ‘கர்ணன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் தனுஷ் அடுத்ததாக சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் அது தனுஷின் 44-வது திரைப்படம் என்றும் செய்திகள் வெளியாகின. இந்த திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, அது மட்டுமில்லாமல் நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாக செய்திகள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன இவர் ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர், தனுஷ் நித்யா மேனன் ஜோடியாக இணைவதால் படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது ரசிகர்களிடம்.

nithya manon
nithya manon

Leave a Comment