ஊட்டியில் தனுசுடன் லூட்டி அடித்த புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் ஷெரின்.! வைரலாகும் புகைப்படம்.

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3, இது முதல் இரண்டு நிகழ்ச்சியை விட பிக் பாஸ் சீசன் 3 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது, இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டதில் ஷெரினும் ஒருவர். நடிகை ஷெரின் சிறுவயதில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தனுசுடன் இணைந்து நடித்துள்ளார், இந்த திரைப்படத்தில் அபிநய், ரமேஷ் கண்ணா,தலைவாசல் விஜய், விஜயகுமார், ஷில்பா ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

மேலும் இவர் நடித்த திரைப்படத்தில் அழகிய அசுரா என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது இந்த பாடலுக்கு பல ரசிகர்கள் மயங்கினார்கள். இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மதர் ஆஃப் த்ரோபேக் எனக் குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர்தான் தனுசுடன் துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் பவ்யமா நடித்திருந்த பெண்ணா என கேட்டுள்ளார்கள், மேலும் தனுஷ் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள்.

dhanush sherin
dhanush sherin

Leave a Comment