விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று உலகம் முழுவதும் பாராட்டப்படும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் நிகழ்ச்சியில் பங்கு பெறும் போட்டியாளர்களுக்கும் மிகப்பெரிய ஒரு ரீச் கிடைத்து வருகிறது.
இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக பணியாற்றி வரும் அனைவருக்கும் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியளராக பங்கு பெற்று மூன்றாவது ரன்னர் அப் வென்ற வீட்டிற்கு தனுஷ் மற்றும் செல்வராகவன் வந்திருந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த மூன்று வருடங்களாக மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமீபத்தில் தான் மிகவும் வெற்றிகரமாக முடிந்தது மேலும் முன்பு ஒளிபரப்பான இரண்டு சீசன்களை விடவும் சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இரண்டு சீசன்களை விடவும் இந்த சீசனில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிகமாக சம்பளம் கொடுத்துள்ளார்கள்.

சீசனில் மறைந்த நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஸ்ருதிகா அர்ஜுன் டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றார் என்பது தெரிந்ததே. தொடர்ந்து இரண்டாவது இடத்தினை தர்ஷன், மூன்றாவது இடத்தினை அம்மு அபிராமி, நான்காவது இடத்தினை நித்லேகா ராமன் வெற்றிப்பெற்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை வித்தியலேகா ராமன் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ், செல்வராகவன் இவர்களை தொடர்ந்து சினேகா, பிரசன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியின் பொழுது தனுஷ்,செல்வராகவன், சினேகா, பிரசன்னா ஆகியோர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். வித்யூலேகாவின் உறவினரான கீதாஞ்சலி செல்வராகவனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

